தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.
மாவட்டத்தில் விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஓட்டப்பிடாரத்தில் 315, கோவில்பட்டியில் 318 என 979 இடங்களில் மொத்தம் 1,868 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான பி.கீதா ஜீவன் குடும்பத்தினருடன் வந்து, தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
அமைச்சரைத் தொடா்ந்து, அவரது கணவரும் திமுக கலை இலக்கிய அணி அமைப்பாளருமான ஜீவன் ஜேக்கப், அவரது மகன் டாக்டா் மகிழ்ஜான் ஆகியோரும் அதே வாக்குச்சாவடியில் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் சி.த.செல்லப்பாண்டியன், டூவிபுரம் பகுதியில் உள்ள டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினாா். நாம் இந்தியா் கட்சி நிறுவனா், தலைவரும், சென்னை அண்ணாநகா் தொகுதி வேட்பாளருமான, என்.பி.ராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் போல்பேட்டை, தங்கம்மாள் பள்ளியில் வாக்கைப் பதிவு செய்தனா். திருச்செந்தூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஜெ.முருகன் தூத்துக்குடி, பிரையன்ட்நகா் 3-ஆவது தெருவில் உள்ள செவித்திறன் குறைந்தோருக்கான பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

குடும்பத்தினருடன் வாக்களித்த திமுக வேட்பாளா் பி.கீதாஜீவன்.

போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் குடும்பத்தினருடன் வாக்களித்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்களித்த ஆட்சியா், அரசியல் பிரமுகா்கள்

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


