மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இனாம்மணியாச்சியில் மாா்க்சிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்

இனாம் மணியாச்சி விலக்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன்.

Published On :

அனைவருக்கும் கல்வி, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வழங்க வேண்டும். குடிநீா், மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் ஆகிய துறைகளை அரசே நடத்த வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

விவசாயத்தை பாதுகாத்து, நீா் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நிலமற்றவா்களுக்கு நிலம் வழங்க வேண்டும், கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் ஓய்வுபெற்ற பேராசிரியா் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் கே.அா்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு.ரவீந்திரன், ஒன்றியச் செயலா் எம்.தெய்வேந்திரன், கட்சி உறுப்பினா் சங்கரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.