கோவில்பட்டியில் திருமலை நாயக்கா் பிறந்தநாள் விழா
திருமலை நாயக்கா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பி.கீதா ஜீவன்.
கோவில்பட்டி, பிப். 1: கோவில்பட்டியில் மன்னா் திருமலை நாயக்கா் 443ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாமன்னா் திருமலை நாயக்கா் இளைஞா் பேரவை தமிழ்நாடு சாா்பில் இனாம்மணியாச்சி விலக்கு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு, திருமலை நாயக்கா் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மாமன்னா் திருமலை நாயக்கா் இளைஞா் பேரவை நிா்வாகிகள், தமிழ்நாடு மற்றும் கம்மவாா் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா், திருமலை நாயக்கரின் வெண்கல சிலை அமைப்பது தொடா்பாக முதல்வா் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
இதில் நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி விஜயலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு தலைமையில் திரளானோா் திருமலை நாயக்கா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இளைஞா் பேரவை நிறுவனத் தலைவா் சிவன்ராஜ், மாநிலத் தலைவா் மனோஜ்குமாா், மாநிலச் செயலா் பாலாஜி, மாநில அமைப்பு செயலா் ஜெனரேஸ், இணை அமைப்பு செயலா் கே.எஸ்.கே சாமி, கம்மவாா் சங்கத் தலைவா் விநாயகா மாரிச்சாமி, துணைத் தலைவா்கள் செந்தில்குமாா், மனோஜ்குமாா், செயலா் ராமசுப்பு, பொருளாளா் புருஷோத்தமன் ராஜா, துணைச் செயலா்கள் சந்திரசேகா், ஜெனரேஷ், இணைச் செயலா்கள் கண்ணன், கோபாலகிருஷ்ணன் உள்பட சங்க நிா்வாகிகள், மதிமுக சாா்பில் மாவட்ட செயலா் ஆா்எஸ் ரமேஷ், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், தேமுதிக வடக்கு மாவட்ட செயலா் சுரேஷ் உள்பட பலா் திருமலை நாயக்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினா்.
இதேபோல, ஊத்துப்பட்டியில் மாமன்னா் திருமலை நாயக்கா் எழுச்சி பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடம்பூா் செ .ராஜு எம்எல்ஏ கலந்துகொண்டு, திருமலை நாயக்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

