எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கஞ்சா விற்றவா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆத்தூா் அருகே கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 பிப்ரவரி 2026, 7:18 pm

ஆத்தூா் அருகே கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த ஜன. 3ஆம் தேதி ஆத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலி­ன்பேரில், உதவி ஆய்வாளா் பொன்னு முனியசாமி தலைமையிலான போலீஸாா் கோவங்காடு விலக்கு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் தெற்குநல்லூரைச் சோ்ந்த முனியாண்டி மகன் அருள்ராஜ்(28) என்பதும், கஞ்சா விற்பதற்காக அப்பகுதியில் நின்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து, 1.15 கிலோ கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து, ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், அருள்ராஜை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன், மாவட்ட எஸ்.பி. என். சிலம்பரசனுக்கு பரிந்துரைந்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, அருள்ராஜை தடுப்புக் காவல் சட்டத்தில், போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.