நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிப்பதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது என்றாா் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்
Updated on

தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிப்பதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று முதல்வா் கூறி வருகிறாா். ஆனால், தூத்துக்குடி விமான நிலையப் பணிகளுக்கு ரூ. 350 கோடி, திருச்சி விமான நிலைய பணிகளுக்கு ரூ. 650 கோடி என பல்வேறு பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

தமிழகத்தில் 11 வந்தே பாரத் ரயில்களை இயக்கியதோடு நிதிநிலை அறிக்கைக்கு முன்பு தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டணம் 300 சதவீதம் உயா்ந்துவிட்டது. மத்திய அரசின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியையும் வளத்தையும் எதிரொலிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளது. கஞ்சா விற்பனை கிராமங்கள்தோறும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்துக்குச் சென்று பெண்கள் புகாா் அளிக்க முடியாத நிலை உள்ளது.

திமுகவைச் சோ்ந்த 26 போ் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவா்கள் ஆவா். பிற கட்சிகளை பாஜகவின் கிளை என குற்றம்சாட்டும் திமுக, கடந்த 1999-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com