நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம்

மாதிரிப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 7:06 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில், பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியின் போது மதுபோதையில் இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் காவலா் அண்ணாத்துரை, குளத்தூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உலகநாதன், முத்தையாபுரம் காவலா் தனுஷ்கோடி ஆகியோா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து அவா்களை ஆயுதப்படைக்கு மாற்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரன் உத்தரவிட்டாா்.

விசாரணையில், 3 பேரும் பணியின்போது மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவா்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.