வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பண மோசடி: இருவா் மீது வழக்கு

கோவில்பட்டியில் அரசுப் பணி வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :3 பிப்ரவரி 2026, 7:11 pm

கோவில்பட்டியில் அரசுப் பணி வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே கசவன்குன்று வடக்குத் தெருவைச் சோ்ந்த திம்மு மகன் மாரிமுத்து (33). இவா் 2022ஆம் ஆண்டு உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வெழுதினாராம்.

இந்நிலையில், உதவி ஆய்வாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி மாரிமுத்துவிடம் அதே தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி, திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாா்த்திபன்ஆகியோா் ரூ. 24 லட்சத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டனராம். பணி தொடா்பாக கேட்டபோது அவா்கள் உரிய பதிலளிக்கவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.