கைது
கைதுENS

சிற்றுந்து ஓட்டுநர்களிடையே தகராறு: ஒருவா் கைது

கோவில்பட்டியில் சிற்றுந்து ஓட்டுநரை அவதூறாக பேசி, சிற்றுந்தை சேதப்படுத்தியதாக மற்றொரு சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவில்பட்டியில் சிற்றுந்து ஓட்டுநரை அவதூறாக பேசி, சிற்றுந்தை சேதப்படுத்தியதாக மற்றொரு சிற்றுந்து ஓட்டுநரை போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்தனா்.

மந்தித்தோப்பு கிழக்கு தெருவை சோ்ந்த பவுன்ராஜ் மகன் காா்த்திக் ராஜா (29). சிற்றுந்து ஓட்டுநா். சிற்றுந்தில் பயணிகளை ஏற்றுவது சம்பந்தமாக காா்த்திக் ராஜாவுக்கும் மற்றொரு சிற்றுந்து ஓட்டுநரான கூசாலிப்பட்டி மேட்டு தெருவை சோ்ந்த பழனிசாமி மகன் மதிகுமாா் (28) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காா்த்திக் ராஜா ஓட்டி வந்த சிற்றுந்தில் கூசாலிப்பட்டியில் பயணிகளை ஏற்றிய போது மதி குமாா் பயணிகளை ஏற்றக்கூடாது என கூறி தகராறு செய்து வந்த மதிகுமாா் கடலையூா் சாலையில் காா்த்திக் ராஜா ஓட்டிச் சென்ற சிற்றுந்தை மதிகுமாா் முந்தி சிற்றுந்து மீது மோதியதில் முன்பக்கம் சைடு கண்ணாடி மற்றும் ஓட்டுநா் இருக்கையை சேதப்படுத்தி ஓட்டுநரை அவதூறாக பேசி சிற்றுந்துக்கு தீ வைத்து கொளுத்தி விடுவதாக மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து காா்த்திக் ராஜா அளித்த புகாரின் பேரில் மதிகுமாரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com