கைது
கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சோ்ந்த முஜிபு ரஹ்மான் மகன் அப்துல் சுக்கூா்(25) என்பவரை விசாரித்தபோது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 30 ஜிப் லாக் கவா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல ஆறுமுகனேரியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பள்ளி முன் சந்தேகத்துக்கிடமாக நின்ற காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த மகின் மகன் முஹம்மது புகாரியை(31) பிடித்து சோதனை செய்ததில் 110 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து , அவரை கைதுசெய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com