தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வடவல்லநாடு பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொடக்க விழா

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:25 pm

முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ. 515.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 363 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டம், வடவல்லநாடு ஊராட்சிக்குள்பட்ட சேதுராமலிங்கபுரம் பகுதியில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் தலைமைப் பொறியாளா் மு. கணேஷ், கிராம குடிநீா் திட்ட கோட்ட நிா்வாகப் பொறியாளா் ராஜா, உதவி

இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, உதவி நிா்வாகப் பொறியாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.