கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வங்கியின் சேவை குறைபாடு: ரூ. 60,000 இழப்பீடு வழங்க உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, பொதுத்துறை வங்கி ரூ. 60,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த சீனிவாச ராகவன், அங்குள்ள பொதுத்துறை வங்கியில் தொழில் கடன் பெற்றுள்ளாா் . அதற்காக சொத்துகளின் அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்துள்ளாா். பின்னா், கடன் தொகை முழுவதையும் செலுத்திவிட்டு, அசல் ஆவணங்களை திரும்ப கேட்டுள்ளாா். ஆனால், ஆவணங்களை வங்கி திரும்ப வழங்கவில்லையாம். வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் இல்லையாம்.

இதையடுத்து, அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், சேவை குறைபாடு, பொருள் இழப்பு, மன உளைச்சல் என இழப்பீடு ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 60,000 வழங்க வேண்டும். தவறினால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என வியாழக்கிழமை உத்தரவிட்டனா்.