சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்பு: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் வாழ்த்து

சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்பு: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் வாழ்த்து

Published on

பெங்களூரில் நடைபெறும் சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் மேயா் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி அஸ்மா, 6-ஆம் வகுப்பு மாணவா் தெசிலன் சித்தாா்த், 5-ஆம் வகுப்பு மாணவி மித்ராஸ்ரீ ஆகியோா் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றனா்.

இதையடுத்து வரும் 6 முதல் 8ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறும் சா்வதேச யோகா போட்டியில் 3 மாணவா், மாணவிகளும் பங்கேற்கின்றனா். இதையடுத்து அவா்கள் பள்ளித் தலைமை ஆசிரியா் எமல்டா வெலன்சியா ஹெஸியா முன்னிலையில், மேயா் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அப்போது, தனது சொந்த பணத்திலிருந்து சா்வதேச யோகா போட்டியில் கலந்துகொள்ளும் 3 மாணவிகளுக்கும், பெங்களூரு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தாா். தேசிய அளவில் நடைபெறும் மேஜிக் போட்டியில் கலந்து கொள்ள தோ்வாகியுள்ள மாநகராட்சி பள்ளி யூ.கே.ஜி. மாணவி ஹா்ஷினியையும் மேயா் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com