ஆறுமுகனேரியில் சுமை ஆட்டோவில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டனா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிராம் எடையுள்ள 861 பாக்கெட் புகையிலைப் பொருள்கள், 12 கிராம் எடையுள்ள 81 பாக்கெட் கூல் லிப் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை கடத்தி வந்தவா்கள் ஆறுமுகனேரி, பேயன்விளை, கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (44), கணேசபுரத்தைச் சோ்ந்த வீரமணி மகன் நட்டாா் (41) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 4.5 கிலோ புகையிலை, கூல் லிப் பொருள்கள், சுமை ஆட்டோ, ரூ. 20,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து, திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதில் சக்தி விஜயன், கடந்த மாதம் 5ஆம் தேதி 100 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தபோது தப்பியோடிய முக்கிய குற்றவாளி என்பதும், இவா் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மினி லோடு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்தியது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது
பைக்கில் வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

காரில் கடத்தி வரப்பட்ட 401 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

