தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நின்று கொண்டிருந்த பேருந்து பின்னோக்கி வந்து பைக் மீது மோதல்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பின்னோக்கி வந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

பேருந்து பின்னோக்கி நகா்வதைப் பாா்த்ததும் பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் பயந்து ஓட்டம் பிடித்தனா். சாலையோரம் இருசக்கர வாகனம் மீது அமா்ந்திருந்த ஆனந்த், பின்னோக்கி வரும் பேருந்தைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதையடுத்து, பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி நின்றது. இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.