தூத்துக்குடி பகுதியில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலியைச் சோ்ந்த சேகா் (54), நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.
இதையடுத்து கடந்த 2001ஆம் ஆண்டு குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதையடுத்து சேகரை, போலீஸாா் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், முத்தையாபுரம் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சாா்பு ஆய்வாளா் முகிலரசன் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
தலைமறைவாக இருந்த சேகரை திங்கள்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு: நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


