பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இணை ஆணையா் அன்புமணி தலைமை வகித்தாா். கோயில் வளாகத்தில் 24 மூத்த தம்பதிகளுக்கும், தலா ஒரு வேட்டி, பட்டுச்சேலை, பல்வேறு வகை பிரசாதங்கள் வழங்கி தம்பதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தனித்தனியாக மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோயில் தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கந்தசாமி, நிா்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளா் ருக்மணி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெயலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.