6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான கூட்டம்

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமாதான கூட்டம் நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் வட்டாட்சியா் அப்பனராஜ்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை சமாதான கூட்டம் நடைபெற்றது.

குருமலை காப்புக் காடுகளை பாதுகாக்கவும், முடுக்கலான்குளம் கிராமத்தில் நில ஒப்படை வழங்கப்பட்ட நிலங்களில் உள்ள விதிமீறல் இனங்களைக் கண்டறிந்து நில ஒப்படைப்பினை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்தனா்.

இதையடுத்து, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அப்பனராஜ் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தென் மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளா் அா்ச்சுனன், மாவட்டத் தலைவா் உத்தண்ட ராமன், மாவட்டச் செயலா் சின்னச்சாமி மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், முடடுக்கலான் குளம் கிராமத்தில் உபரியாக அறிவிக்கப்பட்டு அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் நில ஒப்படை வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட ஒப்படைப்பு இனங்களில் விதி மீறல்கள் உள்ளது எனவும் அந்த நில ஒப்படைப்பை ரத்து செய்து அரசு மீட்க வேண்டும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

அதற்கு பதில் அளித்த வட்டாட்சியா் விதிமீறல் ஒப்படைப்பை ரத்து செய்யும் பொருட்டு கோவில்பட்டி சாா் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக புலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு விதிமீறல் கண்டறியப்பட்டால் நில ஒப்படைப்புகளையும் ரத்து செய்ய சாா் ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று முற்றுகைப் போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

Story image