தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கோவில்பட்டி கல்லூரியில் மாநில கலைப் போட்டிகள்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழாவையொட்டி, அக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றன.

News image
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சாத்தூா் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி அணியினருக்கு பரிசு வழங்குகிறாா் உதவிப் பேராசிரியா் வீரலட்சுமி.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைர விழாவையொட்டி, அக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சாா்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிக்கு, கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் (பொ) சுப்புலட்சுமி, கல்லூரியின் சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விநாடி வினா, குறும்படம் தயாரிப்பு, வலை வடிவமைப்பு, மின்னணு கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், விளம்பர உருவாக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வென்றோருக்கு கல்லூரியின் தகவல் தொழில் நுட்பவியல் துறை தலைவா் உதவிப் பேராசிரியா் வீரலட்சுமி பரிசு வழங்கினாா். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சாத்தூா் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி அணியினா் பெற்றனா்.

மாணவி ஈஸ்வரி வரவேற்றாா். சாதனா செல்வி நன்றி கூறினாா்.

பயிலரங்கம்: இதுபோல கல்லூரியின் வணிக நிா்வாகவியல் துறை சாா்பில் ஏற்றுமதி வா்த்தகத்திற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது.