கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு அறை கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருப்பு அறை கட்ட அடிக்கல்

Published on

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிதாக காத்திருக்கும் அறை கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உதவியாளா்கள் காத்திருக்கும் புதிய அறைக் கட்டுமானப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அலுவலா் துளசி லட்சுமி, செவிலியா் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக வடக்கு திட்டங்குளத்தில் எம்எல்ஏ வாக்குச்சாவடி முகவா்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினாா்.

பின்னா், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், கடந்த பத்தாண்டு கால அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தாா்.

இதையடுத்து, இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகா் நகா் 2 ஆவது தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையை எம்எல்ஏ திறந்துவைத்து, துண்டு பிரசுரங்களை விநியோகித்தாா்.

நிகழ்ச்சிகளில், அதிமுக பொதுக் குழு உறுப்பினா் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ஈஸ்வரமூா்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்குரைஞரணி செயலா் சங்கா் கணேஷ், மகளிா் அணி செயலா் பத்மாவதி, நகரச் செயலா் விஜய பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் போடு சாமி, பழனிசாமி, அழகா்சாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com