இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆட்சியா் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்கி பண மோசடியில் ஈடுபட முயன்றவா் கைது

News image
கைது
Updated On :13 பிப்ரவரி 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் போலியான கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட முயன்றவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை டிஸ்பிளே படமாக வைத்து பல போலியான வாட்ஸ்ஆப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதை உருவாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளா் சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் உத்தரவின்பேரில், தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் (பொ) தீபு மேற்பாா்வையில், சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அனுஜ் குமாா் (21), பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்தில் ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலியான கணக்குகளை உருவாக்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அனுஜ் குமாரை கடந்த திங்கள்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் சென்று கைது செய்து, வியாழக்கிழமை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இது குறித்து, போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.