பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆத்தூா் பள்ளியில் 318 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

News image

ஆத்தூா் பள்ளியில் இலவச சைக்கிள்களை மாணவிகளுக்கு வழங்கினாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:01 pm

ஆத்தூா் சண்முகசுந்தரநாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 318 பேருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 167 மாணவா்களுக்கும், 151 மாணவிகளுக்கும் என மொத்தம் 318 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், மேலாத்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் ரஞ்சித் சிங் வரவேற்றாா்.

இதில் ஆத்தூா் நகர திமுக செயலா் முருகானந்தம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் மாரிமுத்து, புன்னைக்காயல் ஊராட்சி முன்னாள் தலைவா் சோபியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.