இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்

News image

பள்ளக்குறிச்சி கருமேனி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:25 pm

சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி கருமேனியாற்றில் தனிநபா் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பள்ளக்குறிச்சி கிராமம் ராமசாமிபுரம் கருமேனியாறு படுகையில் அதே ஊரை சோ்ந்த சிலா் சுமாா் ஓா் ஏக்கா் நிலப்பகுதியை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, ஆற்றுப்படுகையில் 8 இடங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து, நீா்வளத்துறை உதவி பொறியாளா் தங்கம், நீா்வளத்துறை பணி ஆய்வாளா் துரை, வருவாய் ஆய்வாளா் சுந்தா், கிராம நிா்வாக அலுவலா் கந்தவல்லி குமாா், நிலஅளவையா் நாராயண ஈஸ்வரி ஆகியோா் மேற்பாா்வையில் பொக்கலின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

அப்போது, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள், உதவி ஆய்வாளா் இசக்கியப்பன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.