மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்-வேன் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 5 போ் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:23 pm

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை, சுற்றுலா வேனும் இருசக்கர வாகனமும் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விளாத்திகுளம் அருகே பள்ளாகுளத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குருசாமி (40), குளத்தூா் சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை குருசாமி, அவரது சகோதரா் முனியசாமியின் மகன்கள் முகிலரசன் (5), சுமித்ரன் (3), சகோதரி முத்துலட்சுமி (48), பணிப்பெண் ஆகிய 5 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் குளத்தூரிலிருந்து பள்ளாகுளத்துக்கு சென்றனா்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைப்பாறு பாலம் அருகே இந்த வாகனமும் எதிரே வந்த சுற்றுலா வேனும் மோதினவாம். இதில், குருசாமி உள்ளிட்ட 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

குளத்தூா் போலீஸாா் சென்று சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சோ்ந்த பச்சைக்கிளி (55) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.