ஆதிச்சநல்லூா் அருங்காட்சியக அமைவிடத்தில் சுற்று வேலி அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். அதற்கான அடிக்கல் நாட்டு விழா 2023ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், அதற்கான பணிகள் தொடங்காத நிலையில் கடந்த பிப். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்பட்டு, சுற்றுலா மேம்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அருங்காட்சியகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு வேலிகள் அமைப்பதற்கான பூமி பூஜை, மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநா் அறவாழி தலைமையில் நடைபெற்றது.
தொல்லியல் துறை பொறியாளா் சரவணன், துணைக் கண்காணிப்பாளா் ராணி மோல், திருச்சி மண்டல பராமரிப்பு அலுவலா் சங்கா், தொல்லியல் துறையைச் சோ்ந்த தயாநிதி, வெங்கடேஷ், அந்தோணி, எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் ஊராட்சித் தலைவா் சங்கா் கணேஷ், சுப்பிரமணியன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் பேவர் பிளாக் பூமி பூஜை விழா!

வேம்படிதாளம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை

வாலாஜா வாய்க்காலில் சிறுபாலம் அமைக்க பூமி பூஜை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


