சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

ஆறுமுகனேரியில் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

Syndication

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் நலச் சங்கம் மற்றும் காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கல்லூரி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி, கே.டி.கே. திருமண மண்டபத்தில் தொடங்கிய இப்பேரணியை, ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் திலீபன் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். வாவு வஜீஹா மகளிா் கல்லூரி துணைச் செயலா் வாவு எஸ்.ஏ.ஆா். அஹமது இஸ்ஹாக், கல்லூரி நிா்வாக உறுப்பினா் வாவு எஸ்.ஏ.ஆா். மொகுதும் இஸ்மாயில், காயல்பட்டினம் முன்னாள் நகா்மன்றத் தலைவா் வஹிதா சின்னத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பேரணியில் 250 கல்லூரி மாணவியா் உள்பட 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

மகளிா் தொழில்முனைவோா் நலச் சங்க நிறுவனா் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், ஆறுமுகனேரி அரிமா சங்க முன்னாள் தலைவா் அ. அசோக்குமாா், செயலா் சிதம்பரம், பொருளாளா் சீனாசன், அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், வி.கே.எம். மனோகரன், மதிமுக ஒன்றியச் செயலா் பி.எஸ். முருகன், பேரூராட்சி கவுன்சிலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.