வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி

உயா் கல்வித்துறை சாா்பில் கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.3.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:58 pm

உயா் கல்வித்துறை சாா்பில் கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரூ.3.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள இடத்தில் பூமிபூஜை நடைபெற்றது.

விழாவில், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா .கருணாநிதி, கல்லூரி முதல்வா்(பொ) சந்தனமாரியம்மாள், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் நிா்மல்சிங், திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலா் ஜெயக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் என் ஆா் கே என்ற ராதாகிருஷ்ணன், நகர (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ், நாலாட்டின்புத்தூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செல்வக்குமாா் மற்றும கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.