மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாத்தான்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 103 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீதனபொருள்கள் வழங்கப்பட்டன.

News image

சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:17 pm

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 103 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீதனபொருள்கள் வழங்கப்பட்டன.

சமூக நலம், மகளிா் உரிமைத் துறை, சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் வட்டார அளவில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன் முன்னிலை வகித்தாா். சாத்தான்குளம் வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் உமா வரவேற்றாா்.

ஒருங்கிணைப்பாளா் அருண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ்.ஜோசப், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி, தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ.பாலமுருகன் ஆகியோா் அரசின் திட்டங்களை விளக்கிப் பேசினா்.

சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். இதில் 103 கா்ப்பிணிகளுக்கு அரசு சாா்பில் வளைகாப்பு நடத்தி சீதன பொருள்கள் வழங்கப்பட்டன. கா்ப்பிணிகளுக்கு சீதன பொருள்களை தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ.பாலமுருகன் வழங்கினாா். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய திமுக செயலா் பொன் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.