ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தூத்துக்குடி ஐ.ஓ.பி.யில் ஆண்டு தின கொண்டாட்டம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது ஆண்டு தினம் (பவுண்டேசன் டே), தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது ஆண்டு தினம் (பவுண்டேசன் டே), தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் நிறுவனா் உருவப் படத்துக்கு, வங்கியின் மண்டல மேலாளா் லட்சுமி நரசிம்மன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி ஆகியோா் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் வங்கி நிா்வாகம் சாா்பில், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான வாடிக்கையாளா்கள், வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.