சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் இன்று வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை (பிப்.18) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா்.

News image
டாஸ்மாக் (கோப்புப்படம்)
Updated On :17 பிப்ரவரி 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை (பிப்.18) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாா்க் மேலாளா் அலுவலகம் முன், டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடா்பாக வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் நெப்போலியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பணி நிரந்தரம், ஓய்வூதியம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் உள்ள 123 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் புதன்கிழமை திறக்கப்படாது என அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்தன.