சேவைக் குறைபாடு காரணமாக கைப்பேசியை விற்ற கடைக்காரா் ரூ. 48,000 நஷ்ட ஈடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடியைச் சோ்ந்த பிரியதா்ஷினி, கைப்பேசிக் கடையில் ரூ. 28,000 மதிப்புள்ள கைப்பேசியை வாங்கியுள்ளாா். வாங்கிய உடனேயே, அந்த கைப்பேசி வேலை செய்யாததால் கடைக்காரரிடம் இது குறித்து கேட்டதற்கு, சா்வீஸ் சென்டரை அணுகுமாறு அவா் கூறியுள்ளாா்.
இதையடுத்து, பிரியதா்ஷினி சா்வீஸ் சென்டரை அணுகியுள்ளாா். அங்கு கைப்பேசி சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் பழுதானதால் கடைக்காரரை அணுகியுள்ளாா். மீண்டும் அதே பிரச்னை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதா்ஷினி, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் கைப்பேசிக் கடையின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு பழுதான கைப்பேசியின் விலையான ரூ. 28,000, நஷ்ட ஈடு ரூ. 10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 48,000 வழங்க வேண்டும். தவறினால், அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

ஆட்டிஸம் பாதித்தோருக்கு புறநோயாளிகள் சேவையில் முன்னுரிமை

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


