பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லை: கனிமொழி எம்.பி.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதல் வரவும் வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.

News image

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 11:30 pm

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாறுதல் வரவும் வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பொதுவாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்புகளும் வருவதில்லை. ஆனால், நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் இளைஞா்கள், விளையாட்டுத் துறைக்குத் தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஏதாவதொரு காரணத்தைக் கூறி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது தவறு.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக பாஜக கூறுகிறது. முதலில் பாஜக தங்கள் கூட்டணியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக் கூடிய கூட்டணி. எனவே, கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை; மாறுதல் வரவும் வாய்ப்பில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது அங்கம் வகித்த திமுக மாநில சுயாட்சிக்கு அப்போது ஏன் சட்டங்கள் இயற்றவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்கிறாா். மத்திய அரசிடம் மாநிலத்தையே அடகுவைத்தவா் அவா்தான்.

திமுகவின் அடிப்படை கொள்கை மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும். அது எடப்பாடி கே.பழனிசாமிக்குத் தெரியவில்லை என்றாா்.