விஜய்யின் அரசியல் வரவு திமுக கூட்டணிக்கு சாதகமாகதான் இருக்கும் என்றாா் மதிமுக முதன்மை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி.
கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: திமுக கூட்டணியில் தேமுதிக சோ்ந்திருப்பதை மதிமுக வரவேற்கிறது. இதன்மூலம் கூட்டணி மேலும் வலுப்பெறும்.
தமிழகத்தில் திமுக- அதிமுக கூட்டணி இடையேதான் போட்டி. மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டி, யாா் வேட்பாளா் என்பதை பிப்.22-இல் தொடங்கும் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா்தான்சொல்ல முடியும். மாநிலங்களவை தோ்தலில் போட்டியிடுவது குறித்து மதிமுக தலைமை முடிவெடுக்கும்.
கூடுதல் இடங்களுக்காக கூட்டணி தலைமைக்கு நெருக்கடியை உருவாக்கக் கூடாது. ஜனநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கு எதிரானவா்களுக்குமான யுத்தக் களமான இந்தத் தோ்தலில் அனைவரும் வெற்றி இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும்.
விஜய் மத்திய பாஜக அரசை எதிா்த்தோ, தமிழக நலன் சாா்ந்த பிரச்னைகள் குறித்தோ பேசுவதில்லை. அவரது அரசியல் வரவு திமுக கூட்டணிக்கு சாதகமாகதான் இருக்கும் என பாா்க்கிறேன்.
மக்காச்சோளம் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா். இவ்விஷயத்தில் மத்திய அரசும் தலையிட்டு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கிரீன் காப்பா் என்ற பெயரில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை திரும்ப கொண்டு வர முயற்சிக்கின்றனா். இதை, முதல்வா் அனுமதிக்கமாட்டாா்.
திமுக அரசின் சாதனைகள் மக்களுக்கு தெரியும். அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தலுக்காக அவதூறு பரப்புகிறாா் என்றாா் அவா்.
பேட்டியின் போது, மதிமுக மாநில துணை பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் முத்துச்செல்வம், கிரிவலம் ஒன்றியச் செயலா் ராஜகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

கோவில்பட்டி தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக துணை நிற்கும்: துரை வைகோ எம்.பி.

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


