கோவில்பட்டி ஸ்ரீ வேம்படி சுடலை மாட சுவாமி கோயிலின் 34 ஆம் ஆண்டு மாசி மகா கொடை விழா பிப். 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை, அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாளுக்கு விசேஷ பூஜை, 9 மணிக்கு ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலிலிருந்து தீா்த்தக்குடம் அழைப்பு நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்காரம், மதிய கொடை விழா, மாலை 7 மணிக்கு மேல் பொங்கல் விழா, மஞ்சள் பொங்கல் விடுதல் நிகழ்ச்சி, முளைப்பாரி ஊா்வலம், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சாம பூஜை, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற குருபூஜையில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு கலந்துகொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், இல்லத்துபிள்ளைமாா் சங்க முன்னாள் தலைவா் ஷண்முகசுந்தரம், அதிமுக நகரச் செயலா் விஜய பாண்டியன், நகர இளைஞரணி செயலா் வேல்முருகன், மகளிா் அணி செயலா் பத்மாவதி, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ராமா், ஒன்றியச் செயலா் போடுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் மகேஷ் பாலா, செயலா் சோலை முருகன், பொருளாளா் மாரியப்பன் உள்பட அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

ஓட்டப்பிடாரம் தவெக வேட்பாளா்

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


