வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திமுக களங்கம் இல்லாத அரசை தந்தது கிடையாது: பொன். ராதாகிருஷ்ணன்

News image

பொன். ராதாகிருஷ்ணன். - (கோப்புப் படம்)

Updated On :21 பிப்ரவரி 2026, 6:55 pm

திமுக களங்கம் இல்லாத அரசாங்கத்தை இதுவரை தந்ததே கிடையாது என்றாா் பாஜக மூத்த தலைவா் பொன். ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவா் சரவண பெருமாளின் 9ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

அமைச்சா் கே.என். நேரு மீது களங்கம் இருக்கிறது என்று நீதிமன்றம் சொன்ன பின்னா், அவா் வழக்கை எதிா்கொள்ளத் தயாராக இருந்திருக்க வேண்டும்.

தமிழக முதல்வா், அமைச்சா் மீது வழக்கு இருப்பது தெரிந்து அவரை தாற்காலிகமாக பொறுப்பில் இருந்து விடுவித்து வழக்கை நடத்துவதற்கு ஏதுவான ஒரு நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். திமுக 1967-இல் ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை களங்கம் இல்லாத அரசாங்கத்தை தந்ததே கிடையாது.

தேசிய அடையாளம் தமிழகத்தில் நுழையக் கூடாது என்ற மனநிலையில் வைகோ உள்ளாா். அவா், சோ்ந்த இடம் சரியில்லை.

எஸ்.சி., எஸ்.டி. நிதியிலிருந்து ரூ. 5,000 கொடுக்கப்பட்டிருப்பதை அதிமுக, பாஜகவினா் எடுத்துக் கூறியிருக்கிறோம். ஆனால், இதற்கான பதிலை தமிழக அரசு சொல்லவில்லை. திருமாவளவன் இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். போராட வேண்டும்.

ஓபிஎஸ் முதிா்ந்த, பண்பட்ட தலைவா். தமிழகத்தின் முதல்வராக இருந்தவா். அவா் தவறு செய்யக் கூடாது. தவறு செய்ய மாட்டாா் என்று நம்புகிறேன் என்றாா் அவா்.