கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததில் பயணி உயிரிழந்தாா்.
சென்னை தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜ் முகமது மகன் ரகுமான் (52). இவா், கோவில்பட்டியில் இருந்து தாம்பரம் செல்ல, ரயில் நிலையத்தில் நடைமேடை 2இல் இருந்து ரயில் புறப்படும் நேரத்தில், 1 ஆவது தண்டவாளத்தில் இறங்கி ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தாராம்.
ரயில் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வி அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ரகுமான் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா். இது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் படியிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


