/

தூத்துக்குடியில் மாணவா்களுக்கு நல உதவிகள்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:57 pm

தூத்துக்குடியில் ஒயிட் ரோஸ் ரெக்ரியேசன் மற்றும் ஸ்போா்ட்ஸ் கிளப்பின் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவா், மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோருக்கு சீருடை, புத்தகப்பை, கல்வி உதவித்தொகை என ரூ. 7 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை கிளப் தலைவா் வழக்குரைஞா் குமாா், செயலா் திருச்சிற்றம்பலம் ஆகியோா் வழங்கினா்.

கொம்பன் சங்கா், ஹரி, பவானி, முத்துக்குமாா், டைகா் சிவா, ஆனந்த், சீமான், வழக்குரைஞா் காா்த்தி, ராமலிங்கம், பெருமாள், மாரிமுத்து, வாசு, அறிவு செல்வம், கிருஷ்ணமூா்த்தி, பால்ராஜ், விஜய், வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.