தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் அமைச்சா் பி.கீதாஜீவன்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பி.கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன், மாநகராட்சி மேயா்கள் தூத்துக்குடி ஜெகன் பெரியசாமி, திருநெல்வேலி ராமகிருஷ்ணன், நாகா்கோவில் ரெ.மகேஷ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா் முதல்வா் தூத்துக்குடியிலிருந்து சாலை மாா்க்கமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றாா். குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய், புதன்கிழமை பங்கேற்கும் அவா், பின்னா் புதன்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்து சென்னை செல்கிறாா்.

Story image
Story image