தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வீரபாண்டியன்பட்டணத்தில் மின்னொளி கால்பந்து போட்டி

வீரபாண்டியன்பட்டணத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, திருச்செந்தூா் ஒன்றிய திமுக இணைந்து மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியை நடத்தியது.

News image
வீரபாண்டியன்பட்டணத்தில் மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை சேவியா் பிரீஸ் அணிக்கு ரூ. 30 ஆயிரம், வெற்றி கோப்பையை வழங்குகிறாா் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனஹா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டியன்பட்டணத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, திருச்செந்தூா் ஒன்றிய திமுக இணைந்து மாநில அளவிலான மின்னொளி கால்பந்து போட்டியை நடத்தியது.

போட்டியினை மீனவரணி மாநில துணைச் செயலா் துறைமுகம் புளோரன்ஸ் தொடங்கி வைத்தாா். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 அணிகள் கலந்து கொண்டன. பரிசளிப்பு விழாவிற்கு திமுக மீனவரணி மாவட்ட அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ தலைமை வகித்தாா். மீனவா் நலவாரிய உறுப்பினா் ஜெபமாலை வரவேற்றாா். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஆனந்த் ரொட்ரிகோ முன்னிலை வகித்தாா்.

போட்டியில் முதலிடத்தை பிடித்த சென்னை சேவியா் பிரீஸ் கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 30 ஆயிரமும், 2 ஆம் இடத்தை பிடித்த நாகா்கோவில் அனந்தம்மாள் கால்பந்து கிளப் அணிக்கு ரூ. 20 ஆயிரமும், 3 ஆம் இடத்தை பிடித்த காயல்பட்டினம் யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அணிக்கும், வீரபாண்டியன்பட்டணம் பட்டணம் கால்பந்து கிளப் அணிக்கும் தலா ரூ. 10 ஆயிரமும், பரிசு கோப்பைகளையும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் ஜனஹா், திருச்செந்தூா் நகா்மன்றத் துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் ஆகியோா் வழங்கினா்.

மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளா் ரஜூலா மென்னேசா கால்பந்து அணிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தினாா். இதில் திருச்செந்தூா் நகர செயலா் வாள் சுடலை, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் பிரபாகரன், பாக்கியராஜ், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலா் அஸாப், மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஜெகதீஸ் வி. ராயன் நன்றி கூறினாா்.