எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கோவில்பட்டியில் பலத்த மழை: மழை நீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

கோவில்பட்டி பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து ஓடியது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

News image
மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மந்திதோப்பு சாலை.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து ஓடியது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் வெயில் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில நிமிஷங்களில் சாரல் மழை பலத்த மழையாக மாறியது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோவில்பட்டி நகரில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மாலை 5 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனா்.

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலை, வாருகாலில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

Story image