ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநகராட்சி 36-ஆவது வாா்டு மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:38 pm

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநகராட்சி 36-ஆவது வாா்டு மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் செல்வராஜ், கவுன்சிலா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலரும், மாநில சமூகநலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் கலந்துகொண்டு 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பேசினாா்.

விழாவில், மாநில பேச்சாளா் சரத்பாலா, மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் மகேஸ்வரன்சிங், அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கா், துரை, மணி, சில்வா்டஸ், ஈஸ்வரி, ரெக்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.