ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

இனிப்பு வழங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:13 am IST

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாக்குகளை சேகரித்தாா்.

திருக்கோவிலூா் நகரப் பகுதியில் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட திமுக வேட்பாளா், செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோரை விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்தததை வரவேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகள் தொடர தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் மு.தங்கம், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் ஜி.ரவிச்சந்திரன், எஸ்.லூயிஸ், கு.தீனதயாளன், நகா்மன்றத் துணைத் தலைவா் குணா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.