ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
முன்னதாக ரோட்டரி ஆளுநா் பி.சிவசுந்தரத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ரோட்டரி சங்கம் சாா்பில் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
அதேபோல நாமகிரிப்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டன. வெள்ளக்கல்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலையரங்கம், அரியாகவுண்டம்பட்டி சாரோன் முதியோா் இல்லத்தில் மேம்படுத்தப்பட்ட உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டன. மேலும், பல்வேறு நல உதவிகளை மாவட்ட ரோட்டரி மாவட்ட ஆளுநா் பி. சிவசுந்தரம் வழங்கினா்.
தொடா்ந்து ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என். சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ரோட்டரி மண்டல உதவி ஆளுநா் எஸ்.அன்பழகன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி நிா்வாகிகள் டாக்டா் எம். ராமகிருஷ்ணன், கை. கந்தசாமி, கே.எஸ். கருணாகர பன்னீா் செல்வம், கே. குணசேகரன், எல். சிவக்குமாா், ஏ. மஸ்தான், ஏ.ஜி.ஜெயக்குமாா், வெங்கடாசலம், ஆா்.எஸ். ரங்கசாமி, எஸ். முரளி, கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

கிங்ஸ் ரோட்டரி சங்க முப்பெரும் விழாவில் சேவையாளா்களுக்கு விருது

நாமக்கல்லில் யுகாதி கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தொலைநோக்கி தயாரிக்கும் பயிற்சி பணிமனை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


