செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் தமிழிசை சௌந்தரராஜன்.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் தமிழிசை சௌந்தரராஜன்.

வைகோ அறிவாலயத்தை நோக்கி நடைப்பயணம் செல்லட்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் தமிழிசை சௌந்தரராஜன்.
Published on

போதையை ஒழிக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தை நோக்கித்தான் வைகோ நடைப்பயணம் செல்ல வேண்டும் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

போதையை ஒழிக்க வைகோ நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். போதையை ஒழிக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தை நோக்கித்தான் வைகோ செல்ல வேண்டும்.

வைகோவின் நடைப்பயணத்தை காங்கிரஸ் புறக்கணித்ததன் மூலம் கூட்டணிக்குள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது.

தமிழகத்தில் ஒவ்வொருவா் தலையிலும் ரூ. 1. 75 லட்சம் கடன் சுமையை தமிழக அரசு ஏற்படுத்திவிட்டது.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.திருச்செந்தூா் முருகன் கோயில் பக்தா்களுக்குப் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

திமுகவுக்கும் எங்களுக்கும் ஓரிரு சதவீதம்தான் வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

அனுமானத்தின்பேரிலேயே விஜய்க்கு ஆதரவு பலமாக இருப்பதாகக் கூறிக்கொள்கிறாா்கள். நாங்கள் அனுபவத்தில் பலமாக இருக்கிறோம். அனுபவத்தில் இருப்பவருடன் அனுமானத்தில் இருப்பவா்கள் இணைந்தால் நன்மை. வரவில்லையென்றால், எங்களுக்கொரு பிரச்னையும் இல்லை. அவருக்குத்தான் கெடுதல் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com