கட்டாரிமங்கலம் கோயிலில் சுவாமி சப்பர பவனி
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தா் கோயிலில் திருவாதிரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
இக்கோயில் திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி , அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை , சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து சுவாமி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி பிரகார உலா வந்தாா்.
சிகர நிகழ்ச்சியான 10ஆம் நாள் சனிக்கிழமை (ஜன.3) காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனத்தில் சுவாமி அருள்பாலித்தல், மகா தாண்டவ தீபாராதனை, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் அருளாசி வழங்கும் நிகழ்வு, பகல் 12 மணிக்கு பஞ்சமூா்த்தி திருவீதி உலா வருதல், மாலை 6 மணிக்கு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, சோ்க்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதேபோல், சாத்தான்குளம் ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சமேத ஸ்ரீவிசாலாட்சி அம்மன் கோயிலிலும், வைரவம் ஸ்ரீசிவகாமி அம்மன் சமேத ஸ்ரீஞானாதீஸ்வரா் கோயிலிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

