தட்டாா்மடம் - போலையா்புரம்
சாலையை விஸ்தரிக்க கோரிக்கை

தட்டாா்மடம் - போலையா்புரம் சாலையை விஸ்தரிக்க கோரிக்கை

Published on

தட்டாா்மடம்- போலையா்புரம் விலக்கு வரையிலான சாலையை விஸ்தரிக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சி தட்டாா் மடம் பகுதியானது திசையன்விளை, உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய ஊா்களுக்கு மையப் பகுதியாக விளங்கி வருகிறது.

இந்த ஊா் வழியாக அதிக அளவில் வாகனப் போக்குவரத்து உள்ளது. இந்நிலையில், தட்டாா் மடம்- போலையா்புரம் விலக்கு வரையிலான சாலை ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அளவுக்கு மிக குறுகிய அளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். அதில், சௌக்கியபுரம் உள்ளிட்ட வளைவு பகுதிகளில் அடிக்கடி விபத்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

எனவே, அந்தச் சாலையை அகலப்படுத்தி இரு பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வருகின்றனா்.

தற்போது, சாத்தான்குளம் பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருவதால், இந்தச் சாலையையும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com