தூத்துக்குடியில் இன்றும், நாளையும் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன. 3, 4) வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன. 3, 4) வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3, 4) 2 நாள்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் உரிமை கோரல் தொடா்பான படிவங்கள், புதிய வாக்காளா் சோ்க்கைக்கு படிவம் 6, நீக்கத்திற்கு படிவம் 7, இடமாறுதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் தொடா்பான சேவைகளுக்கு படிவம் 8 ஆகியவற்றை பூா்த்தி செய்து வழங்கி, பொதுமக்கள் பயன்பெறலாம்.

மேலும், ட்ற்ற்ல்ள்://யா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்// என்ற இணையதளம் வழியாகவும் படிவங்களை சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com