பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் குடும்ப தீபமேற்றும் ஆராதனை

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் குடும்ப தீபமேற்றும் ஆராதனை

Published on

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம், தூய திரித்துவ ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு குடும்ப தீபமேற்றும் ஆராதனை நடைபெற்றது.

பிரகாசபுரம் சேகரத் தலைவா் நவராஜ் தலைமை வகித்து ஆராதனை நடத்தினாா். தூத்துக்குடி ஊழியா் ஜுலியஸ் ராஜா தேவ செய்தி வழங்கினாா். தொடா்ந்து, பாடகா் குழுவினா், சபை மக்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி பாடல் பாடி பிராா்த்தனை செய்தனா். ஏற்பாடுகளை சேகரத் தலைவா் நவராஜ், சபை ஊழியா் ஸ்டான்லி, சேகர பொருளாளா் ராபா்ட், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் ஸ்டீபன் சாலமோன், விக்டா் மோகன்சிங், ஆலயப் பாடகா் குழு பொறுப்பாளா்கள் இமானுவேல், பிளஸ்சிங், ஆலயப் பணியாளா் டிக்சன், சேகர கமிட்டி உறுப்பினா்கள், சபை மக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com