மூதாட்டிக்கு மிரட்டல் விடுத்த விவசாயி கைது
கழுகுமலை அருகே மூதாட்டியை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கே. வெங்கடேஸ்வரபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் அப்பாசாமி மனைவி சீத்தாம்மாள்(67). அப்பாசாமியின் முதல் மனைவி வேல்தாய்க்கு 2 மகள், ஒரு மகனும், 2ஆவது மனைவியான சீத்தம்மாளுக்கு 3 மகள்களும் உள்ளனா். சீத்தாம்மாள் தனது பூா்வீக வீட்டில் முதல் மனைவி மகன் விவசாயி ஜெகதீசுடன் வசித்து வருகிறாராம். வியாழக்கிழமை, தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மூதாட்டியை உள்ள அனுமதிக்காமல், ஜெகதீஷ் அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதில் காயமடைந்த மூதாட்டியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெகதீஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
