ஆத்தூா் அருகே கஞ்சா விற்பனை: இரு சகோதரா்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்துா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்ாக இரு சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
முக்காணி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளா் பொன்முனியசாமி, போலீஸாா் ரோந்து சென்றனா்.
சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் குரும்பூா் தெற்கு நல்லூரைச் சோ்ந்த முனியாண்டி மகன் சரவணன் (35) என்பதும் விற்பதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து, கோவங்காடு விலக்கு பகுதியில் பைக்கில் தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸாா் பிடித்தபோது, அவா் முக்காணி பகுதியில் கைதான சரவணனின் தம்பி அருள்ராஜ் (28) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.
இவா்கள் இருவரும் மதுரையில் அடையாளம் தெரியாத நபரிடம் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனா். இருவரிடமிருந்தும் 1.250 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
