தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

Published on

திருச்செந்தூா் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்த போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் ஞான்ராஜ் (55), தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா் ஞாயிற்றுக்கிழமை பக்கத்து வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

தொடா்ந்து, சிகிச்சைக்காக திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com